இடுகைகள்

பரோட்டா கறி சால்னா

படம்
 பரோட்டா கறி சால்னா தேவையான பொருட்கள்: மட்டன் கறி -- 1/4 கிலோ தக்காளி-- 200 கிராம் சின்ன வெங்காயம்--100 கிராம் தேங்காய்--1 / 2 மூடி வற்றல் --8 சீரகம்--2 தேக்கரண்டி எண்ணை--4 தேக்கரண்டி உப்பு, மஞ்சள்-- தேவைக்கேற்ப கொத்தமல்லி இலை--சிறிது செய்முறை: தேங்காயை நன்றாக அரைத்து தண்ணீர் சேர்த்து தேங்காய் பால் (1 கப்) எடுத்துக் கொள்ளவும். வெங்காயம், வற்றல், சீரகம் சேர்த்து மசாலா அரைத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணை விட்டு, சிறிது காய்ந்ததும், சிறு துண்டுகளாக வெட்டி வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து வதக்கவும். அரைத்த மசாலாவையும் சேர்த்து நன்றாக சிவக்க வதக்கவும். கறியை சேர்த்து, தேங்காய்ப்பால் ஊற்றி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, 20 நிமிடங்கள் குக்கரில் நன்றாக வேக வைக்கவும். எண்ணை தெளிந்ததும், கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். சுவையான கறி சால்னா தயார்.

மட்டன் எலும்பு சூப் ( Mutton Bone Soup)

படம்
 மட்டன் எலும்பு சூப் தேவையான பொருட்கள்: எலும்பு--250 கிராம் ஆட்டு இறைச்சி--250 கிராம் கார ட் --2 பெரிய வெங்காயம்--1 கோஸ் --200 கிராம் தக்காளி--3 தர்னிப்-- சிறு துண்டு இஞ்சி--சிறு துண்டு பட்டை--1 கிராம்பு--2 உப்பு- தேவைக்கு ஏற்ப மல்லி இலை- சிறிதளவு எலுமிச்சை சாறு- சிறிதளவு செய்முறை: எலும்பு, இறைச்சி ஆகியவற்றை குக்கரில் அரை லிட்டர் நீரில் நன்கு (20 நிமிடங்கள் வரை)  வேக விடவும். இவற்றின் ஸ்டாக்கை ( Stock) ( வேக வைத்த நீரை) வடிகட்டி, அதனுடன் பொடியாக நறுக்கிய காய்கறிகளையும் சேர்த்து , சிறு தீயில் 10 நிமிடம் வேக வைக்கவும். தேவையான அளவு உப்பு, மல்லி இலை , எலுமிச்சை சாறு சேர்த்து சூடாக பரிமாறவும். நெஞ்சில் சளி தொந்தரவால் அவதிப்படுவோர், இதைப் பருகினால், நல்ல பலன் கிடைக்கும்.

குடை மிளகாய் முட்டை, Capsicum Egg

  குடை மிளகாய் முட்டை தேவையான பொருட்கள் பெரிய குடை மிளகாய்--6 துருவிய தேங்காய்-- 1 கப்  மிளகாய் --8  வெங்காயம்--6  பச்சை பட்டாணி-- ஒரு கப் சிறிய முட்டைக்கோஸ்-- 1  முட்டை-- 6  துருவிய சீஸ் -- 4 கப்  உப்பு --ஒரு டீஸ்பூன்  கரம் மசாலா -- 2 டீஸ்பூன் வதக்குவதற்கு எண்ணை-- 2 குழிக்கரண்டி செய்முறை:  *முட்டைகோஸ் ,வெங்காயம் ,மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். * உப்பு கலந்த கொதிநீரில் மிளகாயை மூன்று நிமிடம் போட்டு எடுக்கவும் . *வாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம் மிளகாய் பட்டாணி இவற்றை வதக்கி உப்பைப் போடவும். *துருவிய தேங்காயையும் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்  *கரம்மசாலா தூள் சேர்த்து புரட்டவும் . *இந்த கலவையை குடமிளகாய் முக்கால் பாகம் நிறையும் வரை அடைக்கவும். * முட்டையை உடைத்து ஊற்றவும் ஒவ்வொரு உடலின் உள்ளும் ஒரு முட்டை ஊற்றி, சீஸ் துருவல் சேர்த்து  அடுப்பில் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

wheat halwa

படம்
  Halwa INGREDIENTS ▢ 1   cup   wheat flour / atta ▢ 5½   cup   water ▢ 1½   cup   sugar ▢ ½-¾   cup   ghee / clarified butter ▢ 2   tbsp   cashew / kaju ,  chopped ▢ pinch   of orange food colour ▢ ¼   tsp   cardamom / elachi powder ▢ 2   tbsp   almonds / badam ,  chopped INSTRUCTIONS firstly, take 1 cup wheat flour and knead to smooth and soft dough adding ½ cup water or as required. soak wheat dough in 5 cup water for 3 to 4 hours. squeeze the dough well and mix with water to get wheat milk. strain the wheat flour water to remove the wheat flour residue. further, transfer the wheat flour milk into large kadai. keep stirring for 10-15 minutes, till the milk turns porridge consistency. now add 1½ cup sugar and ¼ cup ghee. mix well making sure the sugar dissolves completely. after 15 minutes, ghee has been completely absorbed by the wheat mixture. add a tbsp of ghee an...

VANILLA CUPCAKES

படம்
  VANILLA CUPCAKES INGREDIENTS ▢ ¾   cup   curd / yogurt ,  fresh curd ▢ ¼   cup   oil ,  unflavoured ▢ 1   tsp   vanilla extract / vanilla essence ▢ 1¼   cup   maida / all-purpose flour / plain flour ▢ ½   cup   powdered sugar ▢ 1   tsp   baking powder ▢ ½   tsp   baking soda / sodium bicarbonate ▢ pinch   of salt ▢ ¼   cup   water ▢ ¼   cup   chocolate chip ▢ 6   cupcake liners INSTRUCTIONS firstly, in a large mixing bowl take ¾ cup of curd and ¼ cup of oil. further add vanilla extract and whisk well. furthermore whisk 5 minutes till the curd and oil blends smooth. then sieve maida, powdered sugar, baking powder, baking soda and a pinch of salt. whisk and combine. also add ¼ cup of water and make a smooth batter. furthermore, add chocolate chip and fold gently. scoop the cake batter and pour into cupcake liners two-third to ¾ full. and also tap twice to level up uniformly...

செட்டி நாடு கீறி முட்டை

படம்
செட்டி நாடு கீறி முட்டை தேவையான பொருட்கள்: முட்டை--6 நல்லென்னை-- 8 தேக்கரண்டி வற்றல்--5 சீரகம்-1 தேக்கரண்டி வெங்காயம்--50 கிராம் உளுந்தம்பருப்பு--2 தேக்கரண்டி மஞ்சள் தூள், உப்பு-- தேவையான அளவு கருவேப்பிலை-- சிறிது செய்முறை: வற்றல், சீரகம், உளுந்தம்பருப்பு,கருவேப்பிலை எல்லாவற்றையும் வெறும் கடாயில் நான்கு சிவக்கும் வரை வறுக்கவும். இதனுடன் வற்றல் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும். முட்டையை வேக வைத்து, உரித்து, நீள வாக்கில் கீறிக்கொள்ளவும். கீரிய பாகத்தின் உள், தூள் செய்த பொடியை வைக்கவும். கடாயில் எண்ணை ஊற்றி, வெங்காயத்தை வதக்கி, முட்டைகளை போட்டு ஒரு புரட்டு புரட்டி எடுக்கவும். சுவையான கீறி முட்டை தயார்.

CHEPPAN KILANKU ROAST

படம்
 சேப்பங்கிழங்கு ரோஸ்ட் தேவையான பொருட்கள்: சேப்பங்கிழங்கு-- கால் கிலோ எண்ணை-2 குழிக் கரண்டி வற்றல் தூள்-2 டீஸ் ஸ்பூன் கரம் மசாலா- 1 டீ ஸ் ஸ்பூன் உப்பு- தேவையான அளவு செய்முறை: சேப்பங்கிழங்கை ஆவியில் அல்லது நீரில் குழையாமல் முக்கால் பதமாக அவிக்கவும் தோலை உரித்து நீள வாக்கில் வெட்டவும் கடாயில் சிறிது எண்ணை காய வைத்து, சேப்பங்கிழங்கை சிவக்க வறுத்து, தனியே எடுத்து வைக்கவும். பின் வறுத்த கிழங்கில் உப்பு, வற்றல் தூள் சேர்த்து மறுபடியும் ஒரு கரண்டி என்ணயில் சிறு தீயில் வதக்கவும். முருமுருப்பாக வந்ததும், சிறிது கரம் மசாலா தூள் சேர்த்து இறக்கவும்.

karuvattu kulambu

படம்
 குச்சி கருவாடு குழம்பு தேவையான பொருட்கள்: குச்சி கருவாடு --100 கிராம் கத்திரிக்காய்-- 100 கிராம்  சின்ன வெங்காயம்- கால் கிலோ தக்காளி-4 வற்றல்-6 தேங்காய்ச் சில் -2 சீரகம் - 2 தேக்கரண்டி புளி- 50 கிராம் நல்லென்னை-4  குழிக்கரண்டி செய்முறை: வற்றல், சீரகம், தேங்காய் நன்றாக அரைக்கவும். குச்சி கருவாடை சிறிது நேரம் நீரில் நனைய வைக்கவும். குக்கரில் எண்ணை ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய வெங்காயம், தக்காளி, கத்திரிக்காய், மிளாகாய் சேர்த்து வதக்கவும். நான்கு வதங்கியவுடன், அரைத்த மசாலா, உப்பு, மஞ்சள் தூள் போட்டு, சிறிது நீர் விட்டு வேக வைக்கவும். காய்கறி வெந்ததும் , புளியைக் கரைத்து ஊற்றி கொதிக்க விடவும். புளி கொதித்ததும், கருவாடை சேர்த்து, குழம்பு கொதித்து, நன்கு வற்றியதும், இறக்கவும். சுவையான கருவாடு குழம்பு தயார்.
படம்
 செட்டி நாடு இறால் தொக்கு தேவையான பொருட்கள்: 1 கப் இறால் 3/4 கப் தக்காளி 3/4 கப் வெங்காயம் 1 1/2 குழி கரண்டி எண்ணெய் 1/2டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் 1 டேபிள் ஸ்பூன் சீரகம் 2 பல் பூண்டு சின்ன துண்டுஇஞ்சி ஒரு சிட்டிகைசோம்பு 6 கருவேப்பிலை சிறிது அளவுமல்லி தழை 1/4 ட்ஸ்ப்ன் மஞ்சள் தூள் செய்முறை: முதலில் எண்ணெய் ஊத்தி சோம்பு சேர்க்கவும். பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும். பூண்டு மற்றும் இஞ்சியை தட்டி சேர்க்கவும். அடுத்து மஞ்ச தூள்,மிளகாய் தூள்,சீரக தூள் உப்பு சேர்த்து ஒரு 10 நிமிடம் பச்சை வாசம் போகும் வரை நன்கு தொக்கு பதம் வரும் வரை வதக்கவும். எண்ணெய் பிரிந்து மேலே வந்ததும் இறால் சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடம் வேக விடவும்.
படம்
 இறால் பிரியாணி தேவையான பொருட்கள்: இறால் - 1 kg பச்சை மிளகாய் - 8 எண் கொத்தமல்லி இலைகள் - 1/4 கப் இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன் சீரகம் விதை தூள் - 1/2 தேக்கரண்டி கொத்தமல்லி தூள் - 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி வெங்காயம் (இறுதியாக வெட்டப்பட்டது) - 1 கப் (2 எண்) தக்காளி (நறுக்கியது) - 1/2 சமையல் எண்ணெய் - 2 டீஸ்பூன் சுவைக்க உப்பு நீர் - 3 டீஸ்பூன் தேங்காய் பால் - 2 டீஸ்பூன் அரிசிக்கு:  பாஸ்மதி அரிசி - 2 கப் இலவங்கப்பட்டை குச்சி - 1 அங்குலம்  ஏலக்காய் - 2 எண் பிரிஞ்சி இலைகள் - 2 எண்  கிராம்பு - 2 எண்  நெய் - 1 தேக்கரண்டி உப்பு - சுவைக்க செய்முறை: * அரிசியைக் கழுவி 30 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும். * குக்கரில் தண்ணீரை வேகவைக்கவும், கொதிக்கும் போது முழு கிராம் மசாலாக்களையும் (வளைகுடா இலைகள், இலவங்கப்பட்டை ஸ்டிச், ஏலக்காய், கிராம்பு, எண்ணெய் மற்றும் உப்பு) சேர்க்கவும் . *நீரை வடிகட்டி அரிசி சேர்க்கவும். * அரிசி அரை குக் அடுப்பிலிருந்து வெளியே எடுத்தவுடன் (அரிசி பாதி சமைத்தவுடன் அரிசி சில மேலேயும் கீழேயும் செல்லும்). தண்...