karuvattu kulambu

 குச்சி கருவாடு குழம்பு




தேவையான பொருட்கள்:

  • குச்சி கருவாடு --100 கிராம்
  • கத்திரிக்காய்-- 100 கிராம்
  •  சின்ன வெங்காயம்- கால் கிலோ
  • தக்காளி-4
  • வற்றல்-6
  • தேங்காய்ச் சில் -2
  • சீரகம் - 2 தேக்கரண்டி
  • புளி- 50 கிராம்
  • நல்லென்னை-4  குழிக்கரண்டி


செய்முறை:

  • வற்றல், சீரகம், தேங்காய் நன்றாக அரைக்கவும்.
  • குச்சி கருவாடை சிறிது நேரம் நீரில் நனைய வைக்கவும்.
  • குக்கரில் எண்ணை ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய வெங்காயம், தக்காளி, கத்திரிக்காய், மிளாகாய் சேர்த்து வதக்கவும்.
  • நான்கு வதங்கியவுடன், அரைத்த மசாலா, உப்பு, மஞ்சள் தூள் போட்டு, சிறிது நீர் விட்டு வேக வைக்கவும்.
  • காய்கறி வெந்ததும் , புளியைக் கரைத்து ஊற்றி கொதிக்க விடவும்.
  • புளி கொதித்ததும், கருவாடை சேர்த்து, குழம்பு கொதித்து, நன்கு வற்றியதும், இறக்கவும்.
  • சுவையான கருவாடு குழம்பு தயார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

wheat halwa

Rava Kesari ( ரவா கேசரி)

VANILLA CUPCAKES