Poha Kesari (அவல் கேசரி)
அவல் கேசரி
தேவையான பொருட்கள்:
- அவல்--1 கப்
- சர்க்கரை--ஒன்றரை கப்
- முந்திரி--10
- கிஸ்மிஸ்--10
- நெ ய்--1/4 கப்
- ஏலக்காய்--5
செய்முறை:
*முந்திரியை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
*ஏலக்காயை தூள் செய்து கொள்ளவும்.
*நெய்யை உருக்கிக் கொள்ளவும்.
*அடுப்பில் வாணலியை வைத்து 2 தேக்கரண்டி நெய் ஊற்றி நறுக்கிய முந்திரியை பொன் நிறமாக வறுத்துக் கொள்ளவும்.
*அவலை சிறிது நெ ய் விட்டு வறுத்து, சிறிது தண்ணீரில் நனைய வைக்கவும்.
*ஒரு கடாயில், இரண்டு பங்கு தண்னீர் விட்டு, கேசரி தூள் சேர்த்து, கொதிக்க விடவும்.
*அத்துடன் , ஊறிய அவலை சேர்த்துக் கிளரவும்.
* சர்க்கரை,முந்திரி,கிஸ்மிஸ்,நெய்,ஏலக்காய் சேர்த்து, கிளறி இறக்கவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக