பரோட்டா கறி சால்னா

 பரோட்டா கறி சால்னா




தேவையான பொருட்கள்:

  • மட்டன் கறி -- 1/4 கிலோ
  • தக்காளி-- 200 கிராம்
  • சின்ன வெங்காயம்--100 கிராம்
  • தேங்காய்--1 / 2 மூடி
  • வற்றல் --8
  • சீரகம்--2 தேக்கரண்டி
  • எண்ணை--4 தேக்கரண்டி
  • உப்பு, மஞ்சள்-- தேவைக்கேற்ப
  • கொத்தமல்லி இலை--சிறிது


செய்முறை:

  • தேங்காயை நன்றாக அரைத்து தண்ணீர் சேர்த்து தேங்காய் பால் (1 கப்) எடுத்துக் கொள்ளவும்.
  • வெங்காயம், வற்றல், சீரகம் சேர்த்து மசாலா அரைத்துக் கொள்ளவும்.
  • குக்கரில் எண்ணை விட்டு, சிறிது காய்ந்ததும், சிறு துண்டுகளாக வெட்டி வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
  • அரைத்த மசாலாவையும் சேர்த்து நன்றாக சிவக்க வதக்கவும்.
  • கறியை சேர்த்து, தேங்காய்ப்பால் ஊற்றி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, 20 நிமிடங்கள் குக்கரில் நன்றாக வேக வைக்கவும்.
  • எண்ணை தெளிந்ததும், கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
  • சுவையான கறி சால்னா தயார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

wheat halwa

Rava Kesari ( ரவா கேசரி)

VANILLA CUPCAKES