குடை மிளகாய் முட்டை, Capsicum Egg

 குடை மிளகாய் முட்டை

தேவையான பொருட்கள்

  • பெரிய குடை மிளகாய்--6
  • துருவிய தேங்காய்-- 1 கப்
  •  மிளகாய் --8
  •  வெங்காயம்--6
  •  பச்சை பட்டாணி-- ஒரு கப்
  • சிறிய முட்டைக்கோஸ்-- 1
  •  முட்டை-- 6
  •  துருவிய சீஸ் -- 4 கப்
  •  உப்பு --ஒரு டீஸ்பூன் 
  • கரம் மசாலா -- 2 டீஸ்பூன்
  • வதக்குவதற்கு எண்ணை-- 2 குழிக்கரண்டி

செய்முறை: 

*முட்டைகோஸ் ,வெங்காயம் ,மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* உப்பு கலந்த கொதிநீரில் மிளகாயை மூன்று நிமிடம் போட்டு எடுக்கவும் .

*வாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம் மிளகாய் பட்டாணி இவற்றை வதக்கி உப்பைப் போடவும்.

*துருவிய தேங்காயையும் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும் 

*கரம்மசாலா தூள் சேர்த்து புரட்டவும் .

*இந்த கலவையை குடமிளகாய் முக்கால் பாகம் நிறையும் வரை அடைக்கவும்.

* முட்டையை உடைத்து ஊற்றவும் ஒவ்வொரு உடலின் உள்ளும் ஒரு முட்டை ஊற்றி, சீஸ் துருவல் சேர்த்து  அடுப்பில் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

wheat halwa

Rava Kesari ( ரவா கேசரி)

VANILLA CUPCAKES