மட்டன் எலும்பு சூப் ( Mutton Bone Soup)

 மட்டன் எலும்பு சூப்

தேவையான பொருட்கள்:

  • எலும்பு--250 கிராம்
  • ஆட்டு இறைச்சி--250 கிராம்
  • கார ட் --2
  • பெரிய வெங்காயம்--1
  • கோஸ் --200 கிராம்
  • தக்காளி--3
  • தர்னிப்-- சிறு துண்டு
  • இஞ்சி--சிறு துண்டு
  • பட்டை--1
  • கிராம்பு--2
  • உப்பு- தேவைக்கு ஏற்ப
  • மல்லி இலை- சிறிதளவு
  • எலுமிச்சை சாறு- சிறிதளவு




செய்முறை:

  • எலும்பு, இறைச்சி ஆகியவற்றை குக்கரில் அரை லிட்டர் நீரில் நன்கு (20 நிமிடங்கள் வரை)  வேக விடவும்.
  • இவற்றின் ஸ்டாக்கை ( Stock) ( வேக வைத்த நீரை) வடிகட்டி, அதனுடன் பொடியாக நறுக்கிய காய்கறிகளையும் சேர்த்து , சிறு தீயில் 10 நிமிடம் வேக வைக்கவும்.
  • தேவையான அளவு உப்பு, மல்லி இலை , எலுமிச்சை சாறு சேர்த்து சூடாக பரிமாறவும்.
  • நெஞ்சில் சளி தொந்தரவால் அவதிப்படுவோர், இதைப் பருகினால், நல்ல பலன் கிடைக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

wheat halwa

Rava Kesari ( ரவா கேசரி)

VANILLA CUPCAKES