இடுகைகள்

அக்டோபர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Chettinadu mutton kulambu (mutton curry)

படம்
 செட்டி நாடு மட்டன் குழம்பு தேவையான பொருட்கள்: மட்டன் - அரை கிலோ  சின்ன வெங்காயம் – 100 கிராம்  தக்காளி - 2  மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்  மிளகாய் தூள் - 2 ஸ்பூன்  தனியா தூள் - 3 ஸ்பூன்  சோம்பு - 1/2 டீ ஸ்பூன்  பட்டை, கிராம்பு கருவேப்பில்லை  தாளிக்க சிறிதளவு எண்ணெய் - 4 டீ ஸ்பூன்  உப்பு – தேவையான அளவு  அரைக்க தேவையானவை :  மிளகு - 1 டீ ஸ்பூன்  சீரகம் - 1 டீ ஸ்பூன்  சோம்பு - 1 ஸ்பூன்  பூண்டு - 6 பல்  இஞ்சி - ஒரு துண்டு  செய்முறை:  *கறியை சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும்.  *குக்கரில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சுத்தம் செய்த கறியை சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.  *5 விசில் வரை விட்டால் கறி நன்றாக வெந்து விடும்.  *ஒரு கடாயில் மிளகு, சீரகம், சோம்பு மூன்றையும் வறுத்து பூண்டு, இஞ்சி சேர்த்து அரைக்கவும். * அகலமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, கருவேப்பில்லை சேர்த்து தாளிக்கவும். * பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும். இத...

Chettinadu muttai kulambu (Egg Curry)

படம்
 செட்டி நாடு முட்டை குழம்பு தேவையான பொருட்கள்: முட்டை--6 சின்ன வெங்காயம்--10 சிவப்பு வற்றல்--5 சீரகம்--1 தேக்கரண்டி தேங்காய்--5 சில் (துறுவல்--1 கப்) எண்ணை--2 தேக்கரண்டி மஞ்சள் தூள்-- 1/4 தேக்கரண்டி எலுமிச்சை--2 உப்பு--தேவையான அளவு செய்முறை: *முட்டையை வேக வைத்து, உரித்து, இரண்டாக வெட்டி வைத்துக் கொள்ளவும். *தேங்காய், வற்றல், சீரகம் இவற்றை நைசாக அரைத்துக் கொள்ளவும். *ஒரு கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதாக்கவும். *வெங்காயம் வாதங்கியதும், அரைத்த மசலாவைச் சேர்த்து, உப்பு, மஞ்சள் தூள் போட்டு கொதிக்க விடவும். *குழம்பு நன்றாக வற்றி, எண்ணை தெளிந்ததும், எலுமிச்சை சாறு சேர்க்கவும். *வெட்டி வைத்து இருக்கும் முட்டைகளைச் சேர்த்து, மல்லி இலைகளைத் தூவி இறக்கவும். *சுவையான முட்டை குழம்பு தயார்.

GOAT BRAIN FRY (MOOLAI KULAMBU)

படம்
 மூளை குழம்பு தேவையான பொருட்கள்: மூளை--2 வற்றல்( சிவப்பு மிளகாய்)--6 தேங்காய்--4 சில் சீரகம்--1 தேக்கரண்டி  சின்ன வெங்காயம்--10 நல்லெண்ணை --3 தேக்கரண்டி மஞ்சள் தூள்--1/4 தேக்கரண்டி உப்பு-- தேவைக்கேற்ப செய்முறை: *மூளையை நன்கு சுத்தம் செய்து 8 துண்டுகள் ஆக்கிக் கொள்ளவும். *வற்றல், சீரகத்தை  அரைத்துக் கொள்ளவும். *கடாயில்  எண்ணை  ஊற்றிக் காய்ந்ததும், வெங்காயத்தை வதக்கி, மூளைத் துண்டுகளை சேர்த்து, வதக்கவும். *தேங்காய்ப்பாலுடன், அரைத்த வற்றல், சீரகத்தை சேர்த்து, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, சிறு தீயில் வேக வைக்கவும். *குழம்பு கெட்டியாக , எண்ணை பிரிந்ததும் இறக்கவும்.

sura puttu

படம்
  சுறா புட்டு தேவையான பொருட்கள்: சுறா மீன்--1/2 கிலோ சின்ன வெங்காயம்--100 கிராம் / ஒரு கைப்பிடி  பச்சை மிளகாய்--2 மிளகு தூள்--1 தேக்கரண்டி சீரக தூள்---1 தேக்கரண்டி மஞ்சள் தூள்--1/2  தேக்கரண்டி  சமையல் எண்ணை--2 தேக்கரண்டி உப்பு--தேவைக்கேற்ப்ப கருவேப்பிலை-- சிறிதளவு செய்முறை: *ஒரு பாத்திரத்தில், சிறிது நீர் எடுத்து, அதனுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, மீனை அதில் வைத்து 10 நிமிடம் வேக விடவும். *பின் மீனை எடுத்து, அதன் முள் மற்றும் தோலை நீக்கி, உதிர் உதிராக உதிர்த்ததுக் கொள்ளவும். *ஒரு கடாயில், சிறிது எண்ணை ஊற்றி, வெங்காயம்(பொடியாக நறுக்கியது), கருவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். *வெங்காயம் வதங்கியவுடன் , உதிர்த்து வைத்த மீன், மிளகு தூள், சீரக தூள், தேவையான உப்பு சேர்த்து இறக்கவும். சுவையான சுறா புட்டு தயார்.

chettinadu meen kulambu( fish curry)

படம்
 செட்டி நாடு மீன் குழம்பு தேவையான பொருட்கள்:  மீன்-- 1/2 கிலோ  நல்லெண்னை--1 குழிக்கரண்டி  கடுகு--1/4 தேக்கரண்டி  வெந்தயம்--1/4 தேக்கரண்டி சின்ன வெங்காயம்--100 கிராம் (அல்லது ஒரு கை அளவு) இஞ்சி--ஒரு சிறு துண்டு பச்சை மிளகாய்--1  மிளகாய் தூள்--1 தேக்கரண்டி  மஞ்சள் தூள்--1/4 தேக்கரண்டி தக்காளி--2 (மீடியம் சைஸ்)  புளி கரைசல்-- 1 கப்  கறிவேப்பிலை-- சிறிதளவு  உப்பு-- தேவைக்கு ஏற்ப செய்முறை: அசைவ பிரியரா நீங்க? அப்ப வாங்க நான் சொல்லும் டிப்ஸ் கொஞ்சம் யூஸ் பண்ணி மீன் குழம்பு வச்சு  பாருங்க! மீன் குழம்பு வைக்கறது எல்லோரும் புளிய கரைச்சு மிளகாய் தூள் சேர்த்து கொதிக்கவிட்டு மீன தூக்கி போட்டா வருமே அது இல்லைங்க. மீன் குழம்பு வைக்கிறதே ஒரு கலையா நினைச்சு செய்யனும். இல்லையனா ஒரு நீச்சு வாட வந்துடும். அதுக்கு சின்ன அட்வைஸ் கேளுங்க. சிறுவெங்காயம் கொஞ்சம் நறுக்கி வச்சிகிடனும். எப்போதும் போல எண்ணெய் கடுகு தாளிச்சு பிறகு வெந்தயம் கண்டிப்பா போடனும். அப்பத்தான் குழம்பு நல்லா வாசமா இருக்கும். புளி கரைசலில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து உப்பு போட்டு ...