sura puttu

 சுறா புட்டு




தேவையான பொருட்கள்:

  • சுறா மீன்--1/2 கிலோ
  • சின்ன வெங்காயம்--100 கிராம் / ஒரு கைப்பிடி
  •  பச்சை மிளகாய்--2
  • மிளகு தூள்--1 தேக்கரண்டி
  • சீரக தூள்---1 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள்--1/2  தேக்கரண்டி
  •  சமையல் எண்ணை--2 தேக்கரண்டி
  • உப்பு--தேவைக்கேற்ப்ப
  • கருவேப்பிலை-- சிறிதளவு

செய்முறை:

*ஒரு பாத்திரத்தில், சிறிது நீர் எடுத்து, அதனுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, மீனை அதில் வைத்து 10 நிமிடம் வேக விடவும்.

*பின் மீனை எடுத்து, அதன் முள் மற்றும் தோலை நீக்கி, உதிர் உதிராக உதிர்த்ததுக் கொள்ளவும்.

*ஒரு கடாயில், சிறிது எண்ணை ஊற்றி, வெங்காயம்(பொடியாக நறுக்கியது), கருவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

*வெங்காயம் வதங்கியவுடன் , உதிர்த்து வைத்த மீன், மிளகு தூள், சீரக தூள், தேவையான உப்பு சேர்த்து இறக்கவும்.

சுவையான சுறா புட்டு தயார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

wheat halwa

Rava Kesari ( ரவா கேசரி)

VANILLA CUPCAKES