Chettinadu muttai kulambu (Egg Curry)
செட்டி நாடு முட்டை குழம்பு
தேவையான பொருட்கள்:
- முட்டை--6
- சின்ன வெங்காயம்--10
- சிவப்பு வற்றல்--5
- சீரகம்--1 தேக்கரண்டி
- தேங்காய்--5 சில் (துறுவல்--1 கப்)
- எண்ணை--2 தேக்கரண்டி
- மஞ்சள் தூள்-- 1/4 தேக்கரண்டி
- எலுமிச்சை--2
- உப்பு--தேவையான அளவு
செய்முறை:
*முட்டையை வேக வைத்து, உரித்து, இரண்டாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
*தேங்காய், வற்றல், சீரகம் இவற்றை நைசாக அரைத்துக் கொள்ளவும்.
*ஒரு கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதாக்கவும்.
*வெங்காயம் வாதங்கியதும், அரைத்த மசலாவைச் சேர்த்து, உப்பு, மஞ்சள் தூள் போட்டு கொதிக்க விடவும்.
*குழம்பு நன்றாக வற்றி, எண்ணை தெளிந்ததும், எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
*வெட்டி வைத்து இருக்கும் முட்டைகளைச் சேர்த்து, மல்லி இலைகளைத் தூவி இறக்கவும்.
*சுவையான முட்டை குழம்பு தயார்.
கருத்துகள்
கருத்துரையிடுக