GOAT BRAIN FRY (MOOLAI KULAMBU)
மூளை குழம்பு
தேவையான பொருட்கள்:
- மூளை--2
- வற்றல்( சிவப்பு மிளகாய்)--6
- தேங்காய்--4 சில்
- சீரகம்--1 தேக்கரண்டி
- சின்ன வெங்காயம்--10
- நல்லெண்ணை --3 தேக்கரண்டி
- மஞ்சள் தூள்--1/4 தேக்கரண்டி
- உப்பு-- தேவைக்கேற்ப
செய்முறை:
*மூளையை நன்கு சுத்தம் செய்து 8 துண்டுகள் ஆக்கிக் கொள்ளவும்.
*வற்றல், சீரகத்தை அரைத்துக் கொள்ளவும்.
*கடாயில் எண்ணை ஊற்றிக் காய்ந்ததும், வெங்காயத்தை வதக்கி, மூளைத் துண்டுகளை சேர்த்து, வதக்கவும்.
*தேங்காய்ப்பாலுடன், அரைத்த வற்றல், சீரகத்தை சேர்த்து, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, சிறு தீயில் வேக வைக்கவும்.
*குழம்பு கெட்டியாக , எண்ணை பிரிந்ததும் இறக்கவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக