chettinadu meen kulambu( fish curry)

 செட்டி நாடு மீன் குழம்பு



தேவையான பொருட்கள்:

  •  மீன்-- 1/2 கிலோ
  •  நல்லெண்னை--1 குழிக்கரண்டி
  •  கடுகு--1/4 தேக்கரண்டி
  •  வெந்தயம்--1/4 தேக்கரண்டி
  • சின்ன வெங்காயம்--100 கிராம் (அல்லது ஒரு கை அளவு)
  • இஞ்சி--ஒரு சிறு துண்டு
  • பச்சை மிளகாய்--1
  •  மிளகாய் தூள்--1 தேக்கரண்டி
  •  மஞ்சள் தூள்--1/4 தேக்கரண்டி
  • தக்காளி--2 (மீடியம் சைஸ்)
  •  புளி கரைசல்-- 1 கப்
  •  கறிவேப்பிலை-- சிறிதளவு
  •  உப்பு-- தேவைக்கு ஏற்ப

செய்முறை:

அசைவ பிரியரா நீங்க? அப்ப வாங்க நான் சொல்லும் டிப்ஸ் கொஞ்சம் யூஸ் பண்ணி மீன் குழம்பு வச்சு  பாருங்க!


மீன் குழம்பு வைக்கறது எல்லோரும் புளிய கரைச்சு மிளகாய் தூள் சேர்த்து கொதிக்கவிட்டு மீன தூக்கி போட்டா வருமே அது இல்லைங்க. மீன் குழம்பு வைக்கிறதே ஒரு கலையா நினைச்சு செய்யனும். இல்லையனா ஒரு நீச்சு வாட வந்துடும். அதுக்கு சின்ன அட்வைஸ் கேளுங்க.


சிறுவெங்காயம் கொஞ்சம் நறுக்கி வச்சிகிடனும். எப்போதும் போல எண்ணெய் கடுகு தாளிச்சு பிறகு வெந்தயம் கண்டிப்பா போடனும். அப்பத்தான் குழம்பு நல்லா வாசமா இருக்கும். புளி கரைசலில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து உப்பு போட்டு எப்போதும்போல குழம்பு தாளிச்சி கொதிக்க வைக்கனும்.


  கொதி வர்றதுக்குள்ள கொஞ்சம் வெங்காயம், இஞ்சி ஒரு துண்டு, பச்சை மிளகாய் ஒன்னு, கொஞ்சம் கறிவேப்பிலை, தக்காளி அரைச்சு, அதையும் சேர்த்து  நல்லா கொதிக்கவிடனும். கறிவேப்பிலை தாளிக்கும் போது போடுவத தட்டின் ஓரத்துல வச்சுடுவாங்க. ஆனால் இப்படி கொஞ்சம் அரைச்சு போட்டா குழம்போட கறைஞ்சிடும். கறிவேப்பிலை குடல் செறிமானத்திற்கு சரியானது மட்டுமில்லாம முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது.

  

பிறகு சுத்தம் செய்து வச்ச மீன தூக்கி போட்டு ஒரு கொதி நல்லா கொதிக்கவிடுங்க. பிறகு, ஸ்டவ் சிம்ல வச்சி நல்லா 5 நிமிடம் நல்லா கொதிக்க விட்டு நிறுத்திடுங்க. இப்ப மணக்கும் சுவையான மீன் குழம்பு தயார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

wheat halwa

Rava Kesari ( ரவா கேசரி)

VANILLA CUPCAKES