Chettinadu mutton kulambu (mutton curry)
செட்டி நாடு மட்டன் குழம்பு
தேவையான பொருட்கள்:
- மட்டன் - அரை கிலோ
- சின்ன வெங்காயம் – 100 கிராம்
- தக்காளி - 2
- மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
- மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
- தனியா தூள் - 3 ஸ்பூன்
- சோம்பு - 1/2 டீ ஸ்பூன்
- பட்டை, கிராம்பு கருவேப்பில்லை
- தாளிக்க சிறிதளவு எண்ணெய் - 4 டீ ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
அரைக்க தேவையானவை :
- மிளகு - 1 டீ ஸ்பூன்
- சீரகம் - 1 டீ ஸ்பூன்
- சோம்பு - 1 ஸ்பூன்
- பூண்டு - 6 பல்
- இஞ்சி - ஒரு துண்டு
செய்முறை:
*கறியை சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும்.
*குக்கரில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சுத்தம் செய்த கறியை சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.
*5 விசில் வரை விட்டால் கறி நன்றாக வெந்து விடும்.
*ஒரு கடாயில் மிளகு, சீரகம், சோம்பு மூன்றையும் வறுத்து பூண்டு, இஞ்சி சேர்த்து அரைக்கவும்.
* அகலமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, கருவேப்பில்லை சேர்த்து தாளிக்கவும்.
* பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும். இத்துடன் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.
*நன்றாக வதங்கிய உடன் அரைத்து வைத்த மசாலாவை போட்டு வதக்கவும்.
*சிறிது வதங்கிய பின் அதில் மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி, அதில் வேகவைத்த கறியைப் போட்டு நன்கு கொதிக்க விடவும்.
*குழம்பு நன்றாக கொதித்து வற்றி எண்ணெய் மிதந்து வரும். இப்பொழுது ஸ்டவ்வை நிறுத்திவிடலாம்.
*சுவையான செட்டிநாட்டு மட்டன் குழம்பு தயார்.
கருத்துகள்
கருத்துரையிடுக