செட்டி நாடு இறால் குழம்பு
தேவையான பொருட்கள்:
இறால் - 500 கிராம் (சுத்தம் செய்தது)
வறுத்து அரைக்க :
- சோம்பு - 1 டீஸ்பூன்
- சீரகம் - 1 டீஸ்பூன்
- ஓமம் - 1/2 டீஸ்பூன்
- பட்டை - 2 துண்டு
- மிளகு - 1 டீஸ்பூன்
- கிராம்பு - 4
- ஏலக்காய் - 4
- வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
- கசகசா - 1 டேபிள் ஸ்பூன்
- மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
- வரமிளகாய் - 2-4
குழம்புசெய்வதற்கு:
- சின்ன வெங்காயம் - 20 (பொடியாக நறுக்கியது)
- தக்காளி - 2 (நறுக்கியது)
- பச்சை மிளகாய் - 2
- மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
- மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
- புளிச்சாறு - 1 டேபிள் ஸ்பூன்
- கடுகு - 1 டீஸ்பூன்
- பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிது
- எண்ணெய் - 1/4 கப்
- தண்ணீர் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒரு வாணலியில் போட்டு வறுத்து, அரைத்து பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தும், கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சின்ன வெங்காயத்தையும் சேர்த்து பொன்னிறமாக வதக்கிக்கொள்ளவும்.
- அதில் தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, பின் மசாலா பொடிகள் மற்றும் அரைத்து வைத்துள்ள பொடியையும் சேர்த்து கிளறி விட வேண்டும்.
- அத்துடன் உப்பு மற்றும் புளிச்சாறு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மிதமான தீயில் எண்ணெய் தனியாக பிரியும் வரை நன்கு கொதிக்க விட வேண்டும்.
- பின் அதில் இறாலை சேர்த்து 10 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான இறால் குழம்பு ரெடி!
கருத்துகள்
கருத்துரையிடுக