செட்டி நாடு மட்டன் சுக்கா



தேவையான பொருட்கள்: 

  • எலும்பில்லாத மட்டன் – 1/2 கிலோ 
  • சின்ன வெங்காயம் – 100 கிராம்
  •  இஞ்சி, பூண்டு விழுது – 11/2 டீஸ்பூன் 
  • மிளகுத்தூள் – 11/2 டீஸ்பூன் 
  • காய்ந்த மிளகாய் – 6 
  • மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன் 
  • கரம்மசாலா தூள் – 2 டீஸ்பூன்
  •  சோம்பு – ஒரு டீஸ்பூன் 
  • எண்ணெய் – 100 மில்லி 
  • கறிவேப்பிலை – சிறிதளவு 
  • கொத்தமல்லி இலை – 1/2 கப் 
  • உப்பு – தேவைக்கேற்ப

 மட்டன் சுக்கா செய்முறை:

  •  மட்டனை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கவும். 
  •  எண்ணெய் ஊற்றி காய்ந்த உடன் கறிவேப்பிலை சோம்பு சேர்த்து தாளிக்கவும். 
  • இத்துடன் சின்னவெங்காயம் சேர்த்து வதக்கவும். இஞ்சி, பூண்டு சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும். 
  • இத்துடன் மட்டனை சேர்த்து மஞ்சள் தூள், உப்பு போட்டு கிளறவும். காய்ந்த மிளகாயை கிள்ளிப்போடவும்.
  •  கரம் மசாலா தூள், சேர்த்து கிளறி மட்டன் வேகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி விசில் போட்டு வேக வைக்கவும். 
  • 5 விசில் வரை விட்டு ஆறியவுடன் திறக்கவும். இதில் மிளகு தூள் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை ஸ்டவ்வை சிம்மில் வைக்கவும். 
  • கடைசியில் மல்லித்தழை தூவி இறக்கவும்.
  •  மணக்கும் மதுரை மட்டன் சுக்கா வறுவல் ரெடி. 
  • சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். ரசம் சாதத்திற்கு ஏற்ற சுவையான சைடு டிஷ் இது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

wheat halwa

Rava Kesari ( ரவா கேசரி)

VANILLA CUPCAKES