Tandoori Fish
தந்தூரி மீன்
தேவையான பொருட்கள்:
- சீலா மீன்--1 கிலோ
- தயிர்--1 கப்
- சின்ன வெங்காயம்--2
- எலுமிச்சை--1
- எண்ணை--பொறிக்கும் அளவு
- சிவப்பு மிளகாய்--10
- இஞ்சி--1 அங்குலம்
- பட்டை--1 துண்டு
- ஏலம்--3
- பூண்டு--4 பல்
- முந்திரிப்பருப்பு--6/7
- பிரிஞ்சி இலை--2
- உப்பு-- தேவையான அளவு
செய்முறை:
* மீனைக் கழுவி , சுத்தம் செய்து, பெரிய துண்டாக வெட்டிக் கொள்ளவும்.
*சின்ன வெங்காயம்,எலுமிச்சை சாறு,சிவப்பு மிளகாய்,இஞ்சி,பட்டை,ஏலம்,பூண்டு,முந்திரிப்பருப்பு
ஆகியவற்றை நன்கு அரைத்து, உப்பு சேர்த்து,தயிறில் கலக்கவும்.
*மீனை இந்தக் கலவையில் நன்கு புரட்டி எடுத்து, அரை மணி நேரம் ஊற விடவும்.
*பின் தந்தூரி அடுப்பில் அல்லது அவனில்(oven) இந்த துண்டுகளை சுட்டு எடுக்கவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக