Seedai ( உப்பு சீடை)

 உப்பு சீடை




தேவையான பொருட்கள்

  • பச்சரிசி – 1 கப்
  • உளுந்து மாவு – 2 மேஜைக்கரண்டி
  • கடலை மாவு அல்லது பொட்டுக்கடலை மாவு – 1 மேஜைக்கரண்டி
  • வெண்ணெய், இளகியது – 3 மேஜைக்கரண்டி
  • எள் – 2 தேக்கரண்டி
  • பெருங்காயம் – 1/8 தேக்கரண்டி
  • துருவிய தேங்காய் – 3 மேஜைக்கரண்டி
  • உப்பு – தேவைக்கேற்ப

 செய்முறை

*அரிசியை களைந்து 3 மணி நேரம் ஊறவைக்கவும். தண்ணீரை வடித்து, ஒரு சுத்தமான வெள்ளை காட்டன் துணியில் பரப்பி 15 நிமிடம் வைக்கவும்.

*மிக்சியில் நைஸான மாவாக அரைக்கவும்.

*சல்லடையில் சலிக்கவும்.

*வானலில் மிதமான தீயில் மாவை வறுக்கவும். நன்கு ஆவி வரும் வரை வறுக்கவும். கோடு போட்டால் நன்றாக வரைய வரவேண்டும். அந்த அளவிற்கு வறுக்க வேண்டும். ஆனால் நிறம் மாறக் கூடாது.

*உளுந்தை பொன்னிறமாக மிதமான தீயில் வறுக்கவும். ஆறவைத்து, நன்கு நைஸான மாவாக அரைத்து, சலித்து வைத்துக்கொள்ளவும் . லேசாக உளுந்து மாவையும் சூடு செய்து, அரிசி மாவுடன் சேர்க்கவும்.

*துருவிய தேங்காயை ஈரம் போகும் வரை வறுக்கவும். வெண்ணெய், எள், பெருங்காயம், தேங்காய், உப்பு, கடலை மாவு/ பொட்டுக்கடலை மாவு அனைத்தையும் சேர்த்து, நன்கு கலக்கவும்.

*தண்ணீர் தெளித்து, மாவாக பிசையவும். சற்று பொல பொலவென இருப்பது அவசியம். பசைபோல இருக்கக்கூடாது.

*சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

*எண்ணெய் காயவைத்து, சீடையை அதில் கவனமாக போடவும்.

சீடை பொறிக்கும் முறை

*2-3 பாகங்களாக உருட்டிய சீடைகளை பிரித்து பொரிக்கவும்.

*சீடை போடும் பொழுது, எண்ணெய் சூடாக இருக்கவேண்டும். பிறகு, மிதமான தீயில் வைத்து, பாதி வெந்தவுடன் நன்கு கலந்து, மீண்டும் மிதமான தீயிலே வேக வைக்கவேண்டும்.

*சத்தம் அடங்கி, லேசாகவும், பொன்னிறமாக ஆகும் வரை பொரிக்கவும். சற்று நேரம் எடுக்கும், ஆனால் பொறுமை அவசியம். இல்லையென்றால் உள்ளே பொறியாமல்,மிருதுவாக இருக்கும்.

*எண்ணை வடியும் காகிதத்தில் போட்டு வைத்துவிட்டு. எண்ணெய் வடிந்ததும். பரிமாறவும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

wheat halwa

Rava Kesari ( ரவா கேசரி)

VANILLA CUPCAKES