Rava Kesari ( ரவா கேசரி)
ரவா கேசரி
தேவையான பொருட்கள்:
- ரவை - 1 கப்
- சர்க்கரை - 2 கப்
- தண்ணீர் - ஒன்றரை கப்
- நெய் - அரை கப்
- முந்திரிப் பருப்பு- 10
- ஏலக்காய் - 4
- கேசரி பவுடர் - 1 தேக்கரண்டி
செய்முறை:
*முந்திரியை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
*ஏலக்காயை தூள் செய்து கொள்ளவும்.
*நெய்யை உருக்கிக் கொள்ளவும்.
*அடுப்பில் வாணலியை வைத்து 2 தேக்கரண்டி நெய் ஊற்றி நறுக்கிய முந்திரியை பொன் நிறமாக வறுத்துக் கொள்ளவும்.
*அதேநெய்யில் ரவையைக் கொட்டி நன்றாக வறுக்கவும்.
* தண்ணீரைக் கொதிக்க வைத்து வறுத்த ரவையில் ஊற்றி, கட்டியாகாமல் நன்றாகக் கிளறவும்.
*ரவை நன்றாக வெந்ததும்,சர்க்கரையை சேர்த்துக் கிளறவும்.
*கேசரி பவுடரை தண்ணீல் கரைத்து ஊற்றவும்.
* உருக்கிய நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக கேசரியில் ஊற்றிக் கிளறிக் கொண்டே வரவும்.
*வறுத்த முந்திரி, பொடித்த ஏலக்காயைச்சேர்த்துக் கிளறவும்.
* பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது இறக்கி விடவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக